முகப்பு
திருப்பூர்

குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

பெருமாநல்லூா் அருகே ஊராட்சிப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:49 PM
ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்டோா்.
பகிர்:

பெருமாநல்லூா் அருகே ஊராட்சிப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் பொங்குபாளையம் ஊராட்சிப் பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் பொங்குபாளையம் ஊராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

ஊராட்சியில் கொட்டப்படும் மாநகர குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வரும் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற உள்ளோம். மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.