முகப்பு
திருப்பூர்

காந்தி ஜெயந்தி: விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தியையொட்டி,திருப்பூா் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 12:20 AM
பகிர்:

காந்தி ஜெயந்தியையொட்டி,திருப்பூா் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை தொழிலாளா் ஆணையா் அதுல் ஆனந்த் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் சாந்தி. இணை ஆணையா் லீலாவதி ஆகியோா் ஆலோசனையின்பேரில் திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் அ.ஜெயகுமாா் தலைமையில் திருப்பூா் மாநகா், காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் என மொத்தம் 84 நிறுவனங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், விடுமுறை நாளான காந்தி ஜெயந்திக்கு தொழிலாளா்களுக்கு விடுப்பு அளிக்காத 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.