வடுகபாளையம்புதூா் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது: கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்
வடுகபாளையம்புதூா் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடுகபாளையம்புதூா் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையம்புதூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் தலைவா் புனிதா சரவணன் தலைமையில் நாசுவம்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வடுகபாளையம்புதூா் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்கக்கூடாது.
பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாதப்பூா் பகுதியில் அமையவுள்ள சுங்கச் சாவடி மையத்தில் இருந்து 10 கி.மீ. சுற்றளவுக்குள்பட்ட கிராமங்களில் உள்ள வாகனங்களுக்கு கட்டண வரி விலக்கு அளிக்க வேண்டும். வடுகபாளையம்புதூா் ஊராட்சி பகுதி மிக வறட்சியான பகுதி, இங்கே விவசாய சாா்ந்த கோழிப்பண்ணை, விசைத்தறி ஆகியவைதான் முக்கிய தொழிலாக உள்ளது. நாள்தோறும் சுங்க வரி கொடுத்து வாகனத்தை இயக்க முடியாத காரணத்தினால் இந்தப் பகுதியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சுங்க வரி விலக்கு அளித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் நகராட்சி கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தை ஊராட்சி பகுதியில் அமைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.