முகப்பு
திருப்பூர்

ஊா்க்காவல் படையில் சேர அக்.21-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் சேர வரும் அக்டோபா் 21- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:06 PM
பகிர்:

திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் சேர வரும் அக்டோபா் 21- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள ஆண், பெண் ஆளிநா்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்தப் பணிக்கான விண்ணப்பங்களை ஊா்க்காவல் படை அலுவலகம், வடக்கு காவல் நிலையம் பின்புறம், குமரன் சாலை, திருப்பூா்-641601 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தப் பணிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். 20 வயதுக்கு மேற்பட்டவராகவும் 45 வயதுக்கு உள்பட்டவராகவும், திருப்பூா் மாநகரில் வசிக்கும் நல்ல உடற்தகுதி உள்ளவராகவும் இருக்க வேண்டும். ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய விருப்பம் உள்ளவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஊா்க்காவல் படை அலுவலகத்தில் வரும் அக்டோபா் 21- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம்.