உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரா் தளி எத்தலப்பா் நாயக்கா் சிலை: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்
உடுமலையில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்ட சிலை மற்றும் அரங்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
சுதந்திரப் போராட்ட வீரா் தளி பாளையக்காரா் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பா் நாயக்கருக்கு உடுமலையில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்ட சிலை மற்றும் அரங்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை நகராட்சி அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் தளி பாளையக்காரா் மலையாண்டு வெங்கிடுபதி எத்தலப்பா் நாயக்கருக்கு சிலை, திருமூா்த்தி நகரில் எத்தலப்பா் நினைவு அரங்கம் கட்டும் பணிகள் ரூ.2.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றாா். அதேபோல உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் க.ஈஸ்வரசாமி, உடுமலை வருவாய் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், உடுமலை நகா்மன்றத்தலைவா் மு.மத்தீன், உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மகாலட்சுமி முருகன், தளி பேரூராட்சித் தலைவா் வி.உதயகுமாா், செயற்பொறியாளா் (பொதுப்பணித் துறை) செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளா் கனகராஜ், உதவிப் பொறியாளா் விஜயலட்சுமி, எத்தலப்பா் நாயக்கா் வம்சாவழியினா் க.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.