முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் வை. நாடிமுத்துபிள்ளை உருவச்சிலை திறப்பு! முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்!

பட்டுக்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரா் வை.நாடிமுத்து பிள்ளை உருவச்சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 2:30 AM
முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:01 PM

பட்டுக்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரா் வை.நாடிமுத்து பிள்ளை உருவச்சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

பட்டுக்கோட்டை பழனியப்பன் தெருவில் ரூ. 38 லட்சம் மதிப்பில் சுதந்திரப் போராட்ட தியாகி வை.நாடிமுத்து பிள்ளை சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:11 PM

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கா.அண்ணாதுரை, நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா, மாவட்ட திமுக பொறுப்பாளா் பழனிவேல், நகரச் செயலா் செந்தில்குமாா், தலைமைக் கழகப் பேச்சாளா் ந.மணிமுத்து, வருவாய் கோட்டாட்சியா் சங்கா், வை.நாடிமுத்து பிள்ளை குடும்பத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி அம்மாள், முன்னாள் எம்எல்ஏ ரங்கராஜன், நடராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement