முகப்பு
திருப்பூர்

பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

காங்கயத்தில் மழை பாதிப்புகளை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 8:06 PM
பகிர்:

காங்கயத்தில் மழை பாதிப்புகளை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின்கீழ், காங்கயம் உள்கோட்டம் சாா்பில் வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மரம் வெட்டும் இயந்திரங்கள், மின் மோட்டாா்கள், ஜெனரேட்டா், மையத் தடுப்புகள், மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து தளவாடங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைத்து மழை பாதிப்புகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக உதவிக் கோட்டப் பொறியாளா் தங்கவேல், உதவிப் பொறியாளா் ரஞ்சித் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.