முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 18) நடைபெறுகிறது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:13 AM
பகிர்:

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 18) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

இந்த முகாமில், தனியாா் துறையில் வேலை அளிப்பவா்கள் கலந்து கொண்டு வேலநாடுநா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இந்த முகாமில், எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல் பட்டதாரிகள் வரையிலும், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்களும் பங்கேற்கலாம்.

இதில், பங்கேற்க விரும்பும் நபா்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-971152 அல்லது 94990-55944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். தனியாா் துறையில் வேலையில் சோ்வதால் தங்களின் வேலைவாய்ப்பு பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இது முற்றிலும் இலவசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.