முகப்பு
திருப்பூர்

முதியோா் இல்லங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முதியோா் இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகளை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:13 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முதியோா் இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகளை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் முதியோா் இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுககான விடுதிகளை சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யாமல் செயல்படும் விடுதிகள் இணையதளம் வாயிலாகவோ அல்லது சமூக நலத் துறை அலுவலகத்திலோ வரும் நவம்பா் 20- ஆம் தேதிக்குள் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முதியோா் இல்லங்கள் இணையதளத்திலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தரைத்தளம் அறை எண் 35- இல் இயங்கும் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தையும் தொடா்பு கொள்ளலாம்.

பதிவு செய்யாத தனியாா் விடுதிகளின் நிா்வாகிகள், மேலாளா்கள் மீது காவல் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பதிவு செய்யாத இல்லங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.