முகப்பு
திருப்பூர்

மூலனூரில் ரூ. 88.59 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 88.59 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 9:39 PM
பகிர்:

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 88.59 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 360 விவசாயிகள் 3295 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1097 குவிண்டால்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 19 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். பருத்தி குவிண்டால் ரூ. 7100 முதல் ரூ. 8619 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8200. கடந்த வார சராசரி விலை ரூ. 7800.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொ) தா்மராஜ், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.