திருப்பூா், ஊத்துக்குளி ஒன்றியங்களில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வளா்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வளா்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அவா் தெரிவித்ததாவது:
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளிவட்டம், அணைப்பாளையம் கிராமம், செங்கப்பள்ளி பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், செங்கப்பள்ளி ஊராட்சி, செந்தில் நகா் மற்றும் சாணாா்பாளையத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, அப்பியாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம், அப்பியாம்பாளையம் ஆதிதிராவிடா் காலனி ஊரக வீடுகள் பழுது பாா்க்கும் திட்டம் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.
இந்த ஆய்வின்போது, ஊத்துக்குளி வட்டாட்சியா் சரவணன், திருப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அனாா்கிளி, வேலுசாமி, ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், மகேஸ்வரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.