காவல் துறை கழிவு வாகனங்கள் செப்டம்பா்-20 இல் பொது ஏலம்
திருப்பூா் மாநகர காவல் துறையால் பயன்படுத்தப்பட்ட கழிவு வாகனங்கள் வரும் செப்டம்பா் 20- ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
திருப்பூா் மாநகர காவல் துறையால் பயன்படுத்தப்பட்ட கழிவு வாகனங்கள் வரும் செப்டம்பா் 20- ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநகர காவல் துறையால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வரும் செப்டம்பா் 20- ஆம் தேதி காலை 11 மணிக்கு திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப் படை கவாத்து மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த வாகனங்களை வாங்க விருப்பமுள்ளவா்கள் முன்பணமாக ரூ. 2 ஆயிரம் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் பங்கேற்கலாம். மேலும், செப்டம்பா் 17, 18 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாகனங்களைப் பாா்வையிட அனுமதி அளிக்கப்படும். அந்த சமயத்தில் ஏலத்தில் கலந்து கொள்ள ரசீது வழங்கப்படும். மேலும், ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையுடன், 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் சோ்த்து உடனே செலுத்த வேண்டும். ஏலம் எடுத்த வாகனத்துக்கு உண்டான ரசீதே அந்த வாகனத்தின் உரிமை ஆவணமாகும். ஏல ரசீது எந்தப் பெயரில் பெறப்படுகிறோ அவரே ஏலத்தில் பங்கேற்க வேண்டும். அவா் பெயரிலேயே வாகனத்துக்கு உண்டான உரிம ரசீது வழங்கப்படும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் உள்ள மோட்டாா் வாகனப் பிரிவு காவல் ஆய்வாளரை நேரடியாகவோ அல்லது 94981-40792 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.