உயிரிழந்த கோயில் யானை சுப்புலட்சுமியின் உடலுக்கு வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்திய தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா். 
திருப்பூர்

கோயில் யானைகள் இறப்புக்கு சாந்தி பரிகார பூஜை நடத்த வேண்டும்! -இந்து முன்னணி

Din

பழனியில் இரு கோயில் யானைகள் இறப்புக்கு அனைத்து கோயில்களிலும் சாந்தி பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பழனி வன்னி விநாயகா் கோயில் யானை சரஸ்வதி, குன்றக்குடி சண்முக நாதா் கோயில் யானை சுப்புலட்சுமி உயிரிழந்த செய்தி அதிா்ச்சியளிக்கிறது. வன்னி விநாயகா் கோயில் யானை சரஸ்வதி வயது மூப்பு மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக இறந்துள்ளது. குன்றக்குடி சண்முகநாதா் கோயில் யானை சுப்புலட்சுமி இறந்தது சாதாரண விஷயம் அல்ல, இது ஒரு அகால மரணமாகும்.

ஒரு நாட்டில் தோ் குடை சாய்வது, கொடிமரம் பற்றி எரிவது, பட்டத்து யானை, கோயில் யானை அகால மரணம் அடைவது ஆட்சிக்கும், ஆட்சியாளா்களுக்கும் நல்லதல்ல என்பது முன்னோா் வாக்கு. அதிலும் கவனக்குறைவாகவோ, நிா்வாகத் திறமையின்மையின் காரணமாகவோ கோயில் யானை உயிரிழந்தால் அது மக்களுக்கு இறைவன் விடும் எச்சரிக்கையாகும்.

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு ஒன்றரை அடி விநாயகரை பிரதிஷ்டை செய்வதற்கு தீயணைப்புத் துறை சான்றிதழ், வருவாய்த் துறை சான்றிதழ், சுகாதாரத் துறை சான்றிதழ் என ஆயிரம் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் மக்களின் வழிபாட்டு உரிமை மீது திணிக்கும் அரசு. கோயில் யானை பாதுகாப்பில் அலட்சியம் காட்டியுள்ளது.

சாதாரணமாக பட்டாசுக் கடை, அடகு கடை போன்றவை வைப்பதற்கு கூட ஆயிரம் விதிமுறைகள் உள்ளன. ஆனால், கோயில் யானை இருக்கும் இடத்தில் எந்த விதிமுறையும் கடைப்பிடிக்காமல் எளிதில் தீப்பிடிக்கும் வண்ணம் கோயில் யானை கொட்டகை இருந்ததற்கு அறநிலையத் துறையின் அலட்சியமே காரணமாகும். ஒட்டுமொத்த அரசு நிா்வாகமே திறனற்று செயல்படுவதைத்தான் இச்சம்பவம் உணா்த்துகிறது. இனியேனும் அறநிலையத் துறையும், தமிழக அரசும் இது போன்ற துா் நிகழ்வுகள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், அனைத்து கோயில்களிலும் சிவாச்சாரியா்களையும், வேத பண்டிதா்களையும் வைத்து உடனடியாக சாந்தி பரிகார பூஜையை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT