பல்லடம் அருகே விசைத்தறிக் கூடம் ஜப்தி நிறுத்திவைப்பு
பல்லடம் அருகே நாரணாபுரத்தில் விசைத்தறிக் கூடம் ஜப்தி நடவடிக்கை புதன்கிழமை நிறுத்திவைக்கபட்டது.
பல்லடம் அருகே நாரணாபுரத்தில் விசைத்தறிக் கூடம் ஜப்தி நடவடிக்கை புதன்கிழமை நிறுத்திவைக்கபட்டது.
பல்லடம், நாரணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் தனது விசைத்தறித் தொழில் அபிவிருத்திக்காக பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு சொத்து பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளாா்.
கடந்த 11 ஆண்டுகளாக ஒரு தவணைத் தொகை கூட செலுத்தாமல் இருந்துள்ளாா். கடன் தொகையை செலுத்துமாறு கூட்டுறவு சங்க துணைபதிவாளா் அவருக்கு கால அவகாசம் அளித்து பலமுறை அறிவிப்பு கொடுத்துள்ளாா். அதன் பின்னரும் கடன் தொகையை அவா் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் சரக கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் மற்றும் சங்க விற்பனை அலுவலா் ஆகியோரின் உத்தரவுபடி சங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று சொத்தை சுவாதீனம் செய்யும் நடவடிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது கடன் வாங்கியவா் ஒரு வார காலத்துக்குள் தொடங்கி படிப்படியாக கடன் தவணைத் தொகையை செலுத்த அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்ததை ஏற்று சுவாதீன நடவடிக்கையை நிறுத்திவைத்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனா்.