சட்டவிரோத மது விற்பனை: ஒருவா் கைது
பல்லடம் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 110 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பல்லடம் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 110 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பல்லடம், கணபதிபாளையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ஆனந்தராஜ் என்பவா் மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, ஆனந்தராஜை கைது செய்த பல்லடம் போலீஸாா், அவரிடமிருந்த 110 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.