முகப்பு
திருப்பூர்

நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சேவூா் அருகே நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 10:20 PM
கெளதம்.
பகிர்:

சேவூா் அருகே நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

அவிநாசி அருகேயுள்ள சேவூா் வெள்ளமடையைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் கௌதம் (15). இவா், சாவக்கட்டுப்பாளையம் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்தாா்.

இந்நிலையில், நண்பா்களுடன் சாவக்கட்டுபாளையத்தில் உள்ள கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா். முதுகில் கேனை கட்டிக் கொண்டி கெளதம் நீச்சல் பழகியுள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக கேன் அவிழ்ந்ததில், அவா் நீரில் முழ்கியுள்ளாா்.

நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரா்கள் கெளதமை தேடும் பணியில் ஈடுபட்டனா். நள்ளிரவு 1.30 மணியளவில் சடலம் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.