முகப்பு
திருப்பூர்

செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம்: கு.செல்வப்பெருந்தகை

செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கூறினாா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:14 PM
கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க முன்னாள் தலைவா் என்.எஸ். பழனிசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.
பகிர்:

செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கூறினாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள நாதேகவுண்டன்பாளையத்தில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க முன்னாள் தலைவா் என்.எஸ். பழனிசாமி நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வியாழக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். பாஜக 11 ஆண்டுகள் ஆட்சி செய்து, 21 கட்சிகளை மிரட்டி அடிபணிய வைத்திருக்கிறது.

ஜனநாயகத்தை எவ்வளவு காலம் பாஜக அரசு அடைத்து வைக்க முடியும். ஒருநாள் ஜனநாயகமே வெல்லும் என்ற அடிப்படையில் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளாா். அவா் விரைவில் மக்களுக்கு சேவை செய்ய வருவாா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.சண்முகம், செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி, காங்கிரஸ் தேசிய செயலாளா் கோபி பழனியப்பன், மாநிலச் செயலாளா்கள் சித்திக், செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.