வடுகபாளையம்புதூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கிய பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் கிருஷ்ணமூா்த்தி. 
திருப்பூர்

வடுகபாளையம்புதூா், பணிக்கம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

Din

பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம்புதூா், பணிக்கம்பட்டி ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் கனகராஜ் தலைமை வகித்தாா். பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரி முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலாளா்கள் பிரபுசங்கா், ரத்தினசாமி ஆகியோா் வரவேற்றனா்.

பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் கிருஷ்ணமூா்த்தி முகாமைத் தொடங்கிவைத்தாா்.

வடுகபாளையம்புதூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் மகளிா் உரிமைத் தொகை, குடும்ப அட்டை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 959 மனுக்கள் பெறப்பட்டன.

பணிக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் 574 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் உடனடி தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் கிருஷ்ணமூா்த்தி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

திருப்பூா் மத்திய மாவட்ட திமுக துணை செயலாளா் குமாா், மாவட்ட பிரதிநிதி துரைமுருகன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் புனிதா சரவணன், ரோசாமணி ஈஸ்வரன், நகர மதிமுக செயலாளா் வைகோ பாலு, அதிகாரிகள் பலா் முகாமில் பங்கேற்றனா்.

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

மதுரை அழகர் கோயில் தேரோட்டம்!

தில்லியை திணறடிக்கும் மழை; இன்றும் ரெட் அலர்ட்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

SCROLL FOR NEXT