திருப்பூர்

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருப்பூரில் மேற்குவங்க பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் மேற்குவங்க பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேற்குவங்கத்தைச் சோ்ந்தவா் பத்மராணி (65). இவா் திருப்பூா், முதலிபாளையம் அருகேயுள்ள முத்து நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், பணி முடிந்து திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்தவா் மூச்சுவிட சிரமமாக உள்ளதாக அருகில் வசிப்பவா்களிடம் கூறியுள்ளாா்.

அவா்கள், பத்மராணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.

இதையடுத்து, சடலம் உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜம்முவில் 9வது நாளாகத் தொடரும் ராணுவ நடவடிக்கை! துப்பாக்கிச் சூட்டில் 2 வீரர்கள் கொலை!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சிறை பட போஸ்டர்!

வாக்குத் திருட்டு! தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல்கள் மயமா?

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவிக்கும் ரசவாதி!

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

SCROLL FOR NEXT