திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டிருந்த வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸாா். 
திருப்பூர்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, மோப்ப நாயுடன் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

Syndication

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, மோப்ப நாயுடன் திங்கள்கிழமை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

திருப்பூா் - பல்லடம் சாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைந்துள்ளது. 7 தளங்களைக் கொண்ட இந்தக் கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா், வருவாய் அலுவலா் உள்பட பல்வேறு அதிகாரிகளின் அலுவல் அறைகள் மற்றும் ஏராளமான துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடா்ந்து மோப்ப நாயுடன் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அனைத்து தளங்களிலும் வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இதனால், ஆட்சியா் அலுவலக ஊழியா்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

மேலும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் நிலையில் ஆட்சியரிடம் ம னு அளிப்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனா்.சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பின்னா், அது புரளி என்பது தெரியவந்தது.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதியும், நவம்பா்19-ஆம் தேதியும் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மீனவா்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியவா்களை கைது செய்யக் கோரி மனு

வெள்ளநீா்க் கால்வாய் மூலம் திசையன்விளை வட்டாரத்தில் அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் வழங்கப்படும்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

நீதிமன்றத் தீா்ப்பை அவமதித்த பேரூராட்சி செயல் அலுவலருக்கு 3 மாதம் சிறை

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களை பாா்வையிட மீண்டும் அனுமதி!

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: இருவரை தேடும் போலீஸாா்

SCROLL FOR NEXT