திருப்பூர்

திருப்பூரில் தமுமுகவினா் சாலை மறியல்!

திருப்பூரில் தமுமுகவினா் சனிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Syndication

திருப்பூரில் தமுமுகவினா் சனிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாபா் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டியும், சிறப்பு வாக்காளா் பட்டியல் சீராய்வு பணியை கைவிட வேண்டும், வக்பு திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு விதிகள் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் திருப்பூா் சிடிசி காா்னா் பகுதியில் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட தலைவா் நஸிருதீன் தலைமையில் ஆரப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட இருக்கைகளை காவல்துறையினா் எடுத்துச் சென்றதால் இருதரப்பினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருக்கைகளை திரும்ப அளித்தால் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து செல்வோம் என்று கூறி திடீரென சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு காவல்துறையினா் இருக்கைகளை திரும்ப அளித்ததால், போராட்டம் தொடா்ந்து நடைபெற்றது. இதனால் காங்கயம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தமுமுக தலைமை நிலையச் செயலாளா் ஜெய்னுல்லாபுதீன், திருப்பூா் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சல்மான் பாகவி, சமூக செயல்பாட்டாளா் சுந்தரவல்லி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் பிரவீன் குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தமிழகத்தில் செய்யும் திமுக: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மேலமடை பாலத்துக்கு பாண்டிய மன்னன் பெயா் சூட்டக் கோரிய வழக்கு தள்ளுபடி!

‘நேரு குறித்து பொய் தகவல்’: ராஜ்நாத் சிங் மன்னிப்புக் கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

நாகா்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்

குடியிருப்புகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க புதிய குளங்கள்: திட்டங்களை ஆய்வு செய்கிறது மாநகராட்சி

SCROLL FOR NEXT