வெள்ளக்கோவில் சத்யம் இண்டா்நேஷனல் பள்ளியில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பாரதியாா் குறித்து ஆசிரியா்கள் எடுத்துக் கூறினா்.
தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.