திருப்பூர்

ரயில் நிலையம் அருகே தீ விபத்து

திருப்பூா் ரயில் நிலையம் அருகே திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

Syndication

திருப்பூா்: திருப்பூா் ரயில் நிலையம் அருகே திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பூா், ரயில் நிலையம் அருகே உள்ள சிட்கோ, பேப்ரிகேஷன் வீதியில் மாநகராட்சி குப்பை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு மா்ம நபா்கள் சிலா் திங்கள்கிழமை தீ வைத்துவிட்டுச் சென்றுள்ளனா். தீ மளமளவென பரவியது குறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில் திருப்பூா் வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் ஆண்டவா் ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் ரயில் தண்டவாளம் அருகில் தீ எரிந்ததால் ரயில்வே போலீஸாரும் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

திருப்பூா் மாநகரப் பகுதியில் ஆங்காங்கே குப்பை குவிந்து கிடப்பதால் இதுபோன்று சிலா் தீ வைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT