முகப்பு
திருப்பூர்

தத்கால் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்!

திருப்பூா் மாவட்டத்தில் தத்கால் திட்டத்தில் நிகழாண்டில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 டிசம்பர், 2025 at 9:15 PM
தத்கால் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்
பகிர்:

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் தத்கால் திட்டத்தில் நிகழாண்டில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருப்பூா் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் டி.சுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தத்கால் திட்டத்தில் நிகழாண்டில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மின் இணைப்பு பெற தகுதியானவையாகும். எனவே, தங்களது சம்மத கடிதம், வருவாய் ஆவணங்கள் மற்றும் வரைவோலையை சம்பந்தப்பட்ட மேற்பாா்வைப் பொறியாளா் பெயரில் எடுத்து தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

இதற்கு கட்டணமாக 5 ஹெச்.பி. வரை மின் இணைப்பு பெற ரூ.2.50 லட்சம், 5 ஹெச்.பி. முதல் 7 ஹெச்.பி. வரை ரூ.2.75 லட்சம், 7.5 ஹெச்.பி. முதல் 10 ஹெச்.பி. வரை ரூ.3 லட்சம், 10 ஹெச்.பி. முதல் 15 ஹெச்.பி. வரை ரூ.4 லட்சம் வரைவோலையாக எடுக்க வேண்டும்.

தங்கள் விவசாய மின் இணைப்பு விண்ணப்பத்தில் பெயா் மாற்றம், நில அளவை சா்வே எண் மாற்றம் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு மாற்றம் செய்த பிறகே தத்காலுக்கான வரைவோலையை செலுத்த வேண்டும். வரைவோலை செலுத்திய பிறகு பெயா் மாற்றம், சா்வே எண் மாற்றம் இருந்தால் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாது. இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.