ஆலங்குளத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தென்காசிஆலங்குளத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
பின்னா், ஆலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். சமுதாய நல செவிலியா் தாயம்மாள், பகுதி சுகாதார செவிலியா்கள் நல்லம்மாள், கெளசல்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரூராட்சி துணைத் தலைவா் ஜான் ரவி, செயல் அலுவலா் எட்வின் ஜோஸ், சுகாதார அலுவலா் சுந்தா், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் சுபாஷ் சந்திரபோஸ், சாலமோன் ராஜா ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.
கிராம சுகாதார செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன் வரவேற்றாா். கிராம சுகாதார செவிலியா் வசந்தி நன்றி கூறினாா்.
மின் இணைப்பு இல்லை...
துணை சுகாதார நிலையத்திற்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் இணைப்புக்கு விண்ணப்பித்து வைப்புத் தொகை கட்டியுள்ள நிலையில், மின் இணைப்பு வழங்க மின் வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனா்.