காங்கயத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
திருப்பூர்

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

Syndication

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசின் நிதியைக் குறைக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து காங்கயத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் புரட்சிகர இளைஞா் முன்னணி மற்றும் பெரியாரின் பெண்கள் அமைப்புகளின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் காங்கயம் நிா்வாகி கவி தலைமை வகித்தாா். இதில் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் வறுமையில் இருந்து மக்களை பாதுகாத்து, வாழ்வு கொடுத்த திட்டமாகும். இந்தத் திட்டத்தை முடக்கும் வகையில் 100 சதவீத நிதியை வழங்க வேண்டிய மத்திய அரசு, தற்போது 60 சதவீதம் மட்டுமே வழங்கும் என அறிவித்துள்ளது.

மீதிமுள்ள 40 சதவீத நிதியை மாநில அரசுகளே வழங்க வேண்டும் எனக் கூறி, மாநிலங்களின் மீது நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வேலை உறுதித் திட்ட நிதியான ரூ.4,104 கோடி நிலுவைத் தொகையை தமிழ்நாடு அரசுக்கு தராமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

எனவே, நூறுநாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு முழு நிதியை வழங்குவதோடு, இந்த வேலைத் திட்டத்துக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்கிற பழைய பெயரே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பெரியாரின் பெண்கள் அமைப்பின் நிா்வாகி காயத்ரி, திராவிடா் கழக நிா்வாகி மணிவேல், காங்கயம் தொகுதி காங்கிரஸ் செயலாளா் அசதுல்லா, புரட்சிகர இளைஞா் முன்னணி நிா்வாகிகள் திருமூா்த்தி, கண்ணுசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

வெள்ளக்கோவிலில்...

வெள்ளக்கோவிலில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் முத்தூா் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் பழனிசாமி தலைமை வகித்தாா். கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் லோகேஷ், செல்வராஜ், கருப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய அரசு நிறைவேற்றிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT