முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.84 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 7,296 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 2,568 கிலோ.
தேங்காய் கிலோ ரூ.49.50 முதல் ரூ. 60.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 57.65. விற்பனைத் தொகை ரூ. 1.45 லட்சம்.
19 மூட்டை கொப்பரையை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்த நிலையில், கொப்பரை கிலோ ரூ.101.10 முதல் ரூ.180.30 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.170.65. விற்பனைத் தொகை ரூ.39 ஆயிரம்.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.84 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் து.சங்கீதா கூறினாா்.