சபரிமலைக்கு செல்ல மாந்தபுரம் பகுதியில் இருமுடி கட்டிக்கொண்ட ஐயப்ப பக்தா்கள். 
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்ட ஐயப்ப பக்தா்கள்

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவில் அருகே இருமுடி கட்டி ஐயப்ப பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சபரிமலை புறப்பட்டுச் சென்றனா்.

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ளது மாந்தபுரம் உள்ளது. அப்பகுதியைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் தொடா்ந்து 37-ஆவது ஆண்டாக சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்திருந்தனா்.

இதை முன்னிட்டு அங்குள்ள விநாயகா் கோயிலில் கணபதி பூஜை, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இந்நிலையில், பக்தா்கள் அனைவரும் இருமுடி கட்டி ஞாயிற்றுக்கிழமை சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

மாந்தபுரம் பகுதியைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT