திருப்பூர்

லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

அவிநாசி, செங்கப்பள்ளி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

அவிநாசி, செங்கப்பள்ளி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கோவைக்கு அரசு சொகுசு பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. செங்கப்பள்ளி அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியது. இதில், பேருந்து ஓட்டுநா் நஞ்சுண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனா்.

அவா்கள் திருப்பூரில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT