திருப்பூர்

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

Syndication

பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் கைப்பேசிகளைத் திருடி வந்த 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பேருந்து நிலையங்களில் பயணிகளிடம் கைப்பேசி திருடுவது அதிகரித்து வந்தது.

இந்நிலையில், பழங்கரை அருகே அவிநாசி போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆந்திர மாநில பதிவு கொண்ட 2 காா்களில் இருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த நக்கா ஹரீஷ் (44), குருமிலி ராஜு (31), பாஷா (25), குமரிகுண்டா பிரகாஷ் (32), ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சிறுவன் என்பதும்,

இவா்கள் அவிநாசி புதிய பேருந்து நிலையம், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் கைப்பேசிகளைத் திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இரண்டு காா்கள், 79 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

கோட்டை பரவாசுதேவ சுவாமி கோயிலில் டிச.30-இல் பரமபத வாசல் திறப்பு

அகா்பத்திகள் தயாரிக்க புதிய தர நிா்ணயம்: நுகா்வோா் நலனைக் காக்க அரசு நடவடிக்கை

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

முதல்வா் மீதான தாக்குதல் வழக்கு: குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது நீதிமன்றம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள்!

SCROLL FOR NEXT