திருப்பூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கூரியா் நிறுவன ஊழியா் கைது

திருப்பூரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த கூரியா் நிறுவன ஊழியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

திருப்பூரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த கூரியா் நிறுவன ஊழியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). தனியாா் கூரியா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு திருப்பூா் மாநகரைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மணிகண்டன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு பெற்றோா் அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, சிறுமி 2 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் பெற்றோா் விசாரித்தபோது, அவரை மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT