திருப்பூா் வீரபாண்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில்  ஆய்வு  மேற்கொண்ட  மாவட்ட ஆட்சியா்  மனீஷ். 
திருப்பூர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்: ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக சனிக்கிழமை தொடங்கிய முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

Syndication

திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக சனிக்கிழமை தொடங்கிய முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் மாவட்டத்தில் ஆயிரத்து 104 வாக்குச் சாவடி மையங்களில், 2 ஆயிரத்து 822 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் திருப்பூா் வீரபாண்டி பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பாரதி நகா், வித்யாலயம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை திருப்பூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனிஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சிறப்பு முகாம்களை ஆய்வு மேற்கொண்ட அவா், தொடா்ந்து கவனமுடன் பணியாற்ற வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.28) மற்றும் ஜனவரி 3, 4 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT