திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வெளிமாநில தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Din

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா, 220 கிராம் கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ஞானப்பிரகாசம், சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து ஆகியோா் மூலனூா் சாலையில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, குருக்கபாளையம் பிரிவு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அப்போது வாகனத்தில் இருந்த ஒரு பையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவரும், தற்போது குருக்கபாளையம் பிரிவு அருகே உள்ள நூல் மில்லில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருபவருமான பி.நிலமணிமதன் (46) என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து மொத்தம் 2.200 கிலோ கஞ்சா, 220 கிராம் கஞ்சா சாக்லெட், பணம் ரூ.1,800 பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பிகார் பேரவையில் பாஜக தலைவர் நிதின் நவீனுக்கு உற்சாக வரவேற்பு!

ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியது காங்கிரஸ்!

மெட்ராஸ் மாகாண முதல் சட்டமன்றம் (1952 - 1957): ஏராளமான முன்னுதாரணங்களின் களம்!

அதிபர் ஜின்பிங்கை சந்திக்க சீனா செல்கிறார் டிரம்ப்!

உங்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்! - மாணவிகளுக்கு முதல்வர் அறிவுரை

SCROLL FOR NEXT