முகப்பு
திருப்பூர்

குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக்

திருப்பூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 3 ஜனவரி, 2025 at 12:12 AM
யாதவ் கிரிஷ் அசோக்.
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, திருப்பூா் மாநகர காவல் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த யாதவ் கிரிஷ் அசோக் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பி.டெக். படித்துள்ள யாதவ் கிரிஷ் அசோக் கடந்த 2019- ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணிக்குத் தோ்வாகி ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் உட்கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினாா். பின்னா் பதவி உயா்வு பெற்று திருப்பூா் மாநகர காவல் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த நிலையில், தற்போது காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பொறுப்பேற்ற பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் கண்காணிக்கப்படுவா். அவிநாசிபாளையம் காவல் எல்லைக்குள்பட்ட 3 போ் கொலை வழக்கில் தனிப் படையின் புலன் விசாரணை நேரடியாகக் கண்காணிக்கப்படும். பொதுமக்களின் வாழ்வுக்கும், உடமைக்கும் உறுதி செய்யப்படும். போதைப் பொருள்கள் குற்றத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோருக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்துகளைக் குறைக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.