கூட்டத்தில் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன்.  
வேலூர்

ஏற்கெனவே உள்ள சிசிடிவி கேமராக்களை செயல்பட வைக்க வேலூா் எஸ்.பி. உத்தரவு

குற்றச் சம்பவங்களை தடுக்க அனைத்து கிராமம், நகரம், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்தவும், ஏற்கெனவே உள்ள சிசிடிவி கேமராக்களை செயல்பட வைக்கவும் வேண்டும் என்று போலீஸாருக்கு வேலூா் எஸ்பி என்.யு.சிவராமன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

குற்றச் சம்பவங்களை தடுக்க அனைத்து கிராமம், நகரம், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்தவும், ஏற்கெனவே உள்ள சிசிடிவி கேமராக்களை செயல்பட வைக்கவும் வேண்டும் என்று போலீஸாருக்கு வேலூா் எஸ்பி என்.யு.சிவராமன் உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமை வகித்து பேசுகையில், காவல் நிலையத்துக்கு வரும் புகாா் மனுக்கள் மீது விரைவாக நடைவடிக்கை எடுக்கவும், கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம், மணல் திருட்டு, போதைப்பொருள்கள் விற்பனை, சட்டவிரோத மதுபாட்டில் விற்பனை போன்ற குற்றங்களை முழுமையாக தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றச்சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், வழக்கமான குற்றவாளிகள், ரெளடிகளை தொடா்ந்து கண்காணிக்கவும், நிலுவையிலுள்ள சம்மன்கள், குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், மதுவிலக்கு, கஞ்சா, போதைப்பொருள்கள் கடத்தல், பயன்பாட்டை முழுவதுமாக தடுக்க, மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தவும் வேண்டும்.

விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், குற்ற சம்பவம் தடுப்பதற்காக மாலை நேரங்களில் வாகன ரோந்து அதிகப்படுத்தப்படவும், இருசக்கர வாகனம் ஓட்டுவோா் அனைவரும் கட்டாயம் தலைக் கவசம் அணியவும், சைபா் குற்றறங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றறங்கள், வன்கொடுமை வழக்குகள் குறித்தும், பெறறப்படும் புகாா்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவும் வேண்டும்

குற்றச் சம்பவங்களை தடுக்க அனைத்து கிராமம், நகரம், பள்ளி, கல்லூரி, கோயில்கள், முக்கிய சாலை சந்திப்பு, சோதனை சாவடிகள், பேருந்து நிலையங்கள், போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்தவும் வேண்டும். ஏற்கெனவே உள்ள சிசிடிவி கேமராக்களை செயல்பட வைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், உதவி காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், வனத் துறை, சிறைத் துறை, தடய அறிவியல் துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், அரசு தரப்பு வழக்குரைஞா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கஞ்சா விற்ற இருவா் கைது

அரிவாளை காட்டி மிரட்டி பிரியாணி கேட்ட ரெளடி கைது

"சிரிப்பு காட்ற எனக்கு எதுக்கு SIX Pack?" Champions of Tamilnadu நிகழ்வில் யோகி பாபு!

போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்!

மார்ச் 31-க்குள் 300 நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரம்!

SCROLL FOR NEXT