முகப்பு
திருப்பூர்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஜனவரி 5-இல் ஓட்டப்பந்தயம்

திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான ஓட்டப்பந்தயம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) நடைபெறவுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2025 at 12:16 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான ஓட்டப்பந்தயம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூா் மாவட்ட பிரிவின் மூலம் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்துர ஓட்டப்பந்தயம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி வஞ்சிபாளையம் வரையில் சென்று மீண்டும் சிக்கண்ணா கல்லூரியில் போட்டி நிறைவடைகிறது.

இதில், 17 வயது முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கு 8 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டரும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டரும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

போட்டியில் பங்கேற்பவா்கள் வயது சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் படிப்பவா்களாக இருந்தால் அதற்கான சான்றிதழ், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். போட்டிக்கு முன்பு விளையாட்டு அலுவலகத்தில் பெயா், மருத்துவரின் தகுதி சான்றிதழ், ஆதாா் அட்டைநகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

வெற்றிபெறுபவா்களுக்கு முதல் மூன்று இடங்கள் முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும், 4 முதல் 10 இடங்களைப் பிடிக்கும் நபா்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.