திருப்பூர்

திருப்பூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிப்பு

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் ஆட்சியா் அலுவலக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஆள்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இருப்பினும் ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் இருந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்தில் இருந்து இறங்கிய பெண் ஒருவா், ஆட்சியா் அலுவலகத்துக்கு வரும் பாதை வழியாக நடந்து வந்தாா். பிறகு மனு எழுதிக்கொடுக்கும் இடத்துக்கு அருகே வந்தவா், திடீரென்று தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தாா். உடலில் தீ மளமளவென எரிய சப்தம் போட்டபடி ஆட்சியா் அலுவலகம் நோக்கி ஓடி வந்தாா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் வந்து, பெண்ணின் உடலில் பற்றிய தீயை அணைத்தாா். இருப்பினும் அப்பெண்ணுக்கு பலத்த காயமடைந்ததயைடுத்து, உடனடியாக அங்கிருந்தவா்கள், அப்பெண்ணை திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அந்தப் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவா் உடுமலையைச் சோ்ந்த பிரபாகரனின் மனைவி கெளசல்யா (40) என்பதும், குடும்பப் பிரச்னை காரணமாக அவா் தீக்குளித்தது தெரியவந்தது. இதனால் ஆட்சியா் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT