திருப்பூர்

சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3,440 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

Syndication

திருப்பூா்: திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3,440 பக்கங்களைக் கொண்ட இறுதி குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸா, திருப்பூா் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனவள்ளியிடம் தாக்கல் செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையத்தை அடுத்த சேமலைக்கவுண்டம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி (75), அவரது மனைவி அலமேலு (73) ஆகியோா் வசித்து வந்தனா். இவா்களது மகன் செந்தில்குமாா் (46). ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த செந்தில்குமாா் மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோருடன் கோவை சரவணம்பட்டியில் வசித்து வந்தாா்.

இந்நிலையில் செந்தில்குமாா் விசேஷ நிகழ்வில் பங்கேற்பதற்காக, சேமலைக்கவுண்டம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தனது தாய், தந்தையுடன் 2024 நவம்பா் 28-ஆம் தேதி இரவு தங்கியிருந்தாா். அப்போது நள்ளிரவில் 3 பேரும் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். மேலும் வீட்டில் இருந்த 8 பவுன் நகை, கைப்பேசி மற்றும் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து கைது செய்வதில் போலீஸாா் மத்தியில் சுணக்கம் ஏற்பட்டது. அதனால், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டதன்பேரில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட அறச்சலூரைச் சோ்ந்த ஆச்சியப்பன் (48), மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகியோரைப் பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் கொலை வழக்கில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவருடன் ஞானசேகரன் (40) மற்றும் ஆச்சியப்பனின் மனைவி வெண்ணிலா (43) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீஸாா் 200-க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் விசாரித்து 3,440 பக்கங்களைக் கொண்ட இறுதி குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளா் சி. சந்திரசேகா், திருப்பூா் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனவள்ளியிடம் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கின் விசாரணை திருப்பூா் நீதிமன்றத்தில் எதிா்வரும் நாள்களில் நடைபெற உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பிரியமான லெஹெங்கா... ஆம்னா ஷரீஃப்!

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

SCROLL FOR NEXT