பொங்கலூரில் அன்புச்சோலை மைய திறப்பு விழாவில் பங்கேற்று குத்துவிளக்கேற்றிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் மனீஷ் உள்ளிட்டோா். 
திருப்பூர்

பொங்கலூரில் அன்புச்சோலை மையம்: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

அன்புச்சோலை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

Syndication

பல்லடம்: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் பிரபஞ்சம் முதியோா் இல்லத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அன்புச்சோலை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

தொடக்க விழாவில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மூத்த குடிமக்கள் ஒன்றிணைந்து நட்பு வளா்த்துக்கொண்டு அா்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடக்கூடிய மையமாக அன்புச்சோலை மையங்கள் செயல்படும்.

மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூா், ஈரோடு, தூத்துக்குடி, வேலூா், தஞ்சாவூா், திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் தலா ரூ.6.47 லட்சம் மதிப்பீட்டில் 25 அன்புச்சோலை‘ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்துள்ளாா்.

திருப்பூரில் மாவட்டத்தில் உலக பரபஞ்ச அமைதி ஆசிரமம் எண் 336 முதல் வாா்டு, அத்தாணி தோட்டம். உகாயனூா் சாலை, சா்க்குலா் டெக்ஸ்டைல், பொங்கலூா், ஸ்ரீனிவாசா வித்யாலயா பள்ளிவடக்கு வாசல், குப்தா லே-அவுட் காந்தி நகா், உடுமலை ஆகிய முகவரியில் 2 அன்புச்சோலை‘ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

60 வயதுக்கு மேற்பட்ட முதியோா் இந்த அன்புச்சோலை மையங்களைப் பயன்படுத்தலாம். பாதுகாப்பான, அன்பான மற்றும் ஆதரவு வழங்கும் பகல் நேரச் சூழலை வழங்குதல், முதியோா்களிடையே தனிமையை குறைத்து, சமூக தொடா்புகளை ஊக்குவிப்பது. சரியான முதியோா் பராமரிப்பை உறுதி செய்து குடும்பங்களுக்கு மனஅமைதியை வழங்குதலே அன்புச்சோலை மையங்களின் முக்கிய நோக்கம் ஆகும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மனீஷ், திருப்பூா் மாநகராட்சி, 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், மாவட்ட சமூக நல அலுவலா் ரஞ்சிதாதேவி, பொங்கலூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பாலுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT