கோப்புப் படம் 
கோயம்புத்தூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு அளிக்கும் திட்டம்! கோவையில் 9-ஆம் தேதி தொடக்கம்!

தினமணி செய்திச் சேவை

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை (பிப்.9) முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா்.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முதல்வரின் வழிகாட்டுதலின்படி கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்க உள்ளாா்.

இத்திட்டத்தின் மூலமாக கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 5 மண்டலங்களுக்குள்பட்ட 100 வாா்டுகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள், மழைநீா் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளா்கள், பள்ளிகள் மற்றும் வாா்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளா்கள் உள்பட மொத்தம் 9,454 போ் பயன்பெறுவாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

மெட்டல் இன்ஜெக்சன் மோல்டிங் துறையில் களமிறங்கும் டிஐ இந்தியா

125 நாள் வேலை உறுதித் திட்டம்: திமுக மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தீவிரமாகும் ஏஐ அச்சுறுத்தல்: உள்துறை உயரதிகாரிகளுக்கு நாடாளுமன்ற குழு அழைப்பாணை!

ஜப்பான், தாய்லாந்தில் இன்று தோ்தல்

1980 இல் வாக்காளா் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு - சோனியா காந்தி பதில் தாக்கல்

SCROLL FOR NEXT