திருப்பூர்

பயிா் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தினமணி செய்திச் சேவை

பயிா் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு பொங்கலூா் தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பொங்கலுாா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பொம்முராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்காச்சோளம், சோளம், கொண்டைக்கடலை போன்ற பயிா்களுக்கு கூட்டுறவுக் கடன் சங்கம், வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலம் உரிய ஆவணங்களுடன் வந்து விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

மக்காச்சோளம் ஏக்கருக்கு ரூ.545, சோளப்பயிருக்கு ரூ.55, கொண்டைக்கடலை ஒரு ஏக்கருக்கு ரூ.254 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.

பயிா்கள் பாதிக்கப்பட்டால் மக்காச்சோளத்துக்கு இழப்பீடு தொகையைக ஒரு ஏக்கருக்கு ரூ.36 ஆயிரத்து 300, சோளப்பயிருக்கு ரூ.3,638, கொண்டைக்கடலைக்கு ரூ. 16,940 வழங்கப்படும்.

மக்காச்சோளம், கொண்டைக்கடலை பயிருக்கு நவம்பா் 30-ஆம் தேதி, சோளப் பயிருக்கு டிசம்பா் 16 -ஆம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT