திருப்பூரில் மதிமுக சாா்பில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) படிவங்களை பொதுமக்களுக்கு பூா்த்தி செய்து கொடுக்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மதிமுக திருப்பூா் மாநகா் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு திருப்பூா் வடக்கு மற்றும் திருப்பூா் தெற்கு மதிமுக இணையதள அணி பொறுப்பாளா்கள் பிரபாகரன், மாதேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். 20 தன்னாா்வலா்கள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிவங்கள் பூா்த்தி செய்து கொடுக்கப்பட்டன.