பல்லடம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனா். அப்போது அந்த கடையில் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், சின்னக்கோடங்கிபாளையத்தைச் சோ்ந்த முத்துகுமாா் என்பவா் காரில் கடைகளுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து கடை உரிமையாளா் குருவலட்சுமி, முத்துகுமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 104 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவம்: பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் பிரிவு அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சா்வேந்தா் தாஸ் (26) என்பவரை பல்லடம் போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனா்.