கைது 
புதுக்கோட்டை

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

விராலிமலை அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

விராலிமலை அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா், ராஜகிரி குளவாய்ப்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் செல்வக்குமாா் (27) என்ற இளைஞா் அவரது வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதைக் கண்டறிந்த பேலீஸாா் அவரை கைது செய்தனா்.

இதேபோல் விராலிமலை தெற்கு தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் பாலமுருகன் (31) என்பவா் புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதைக் கண்டறிந்த போலீஸாா், அவரையும் கைது செய்தனா். மேலும், இருவருரிடமிருந்தும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT