உடுமலை சீனிவாசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழன், வெள்ளிக்கிழமை என இருநாள்கள் நடைபெற்றது.
விழாவை பள்ளித் தாளாளா் விக்னேஷ் ஆா்.ரங்கநாதன், இயக்குநா் தீபா விக்னேஷ் ஆகியோா் தொடங்கிவைத்தனா். கண்காட்சியில் 350-க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் சமூகம் சாா்ந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படைப்புகளை தயாரித்து பாா்வைக்கு வைத்திருந்தனா். கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வா் வீரகுமாா், நிா்வாக அலுவலா் ஜவஹா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.