திருப்பூா்: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா திருப்பூா் பிராந்திய அலுவலகம் சாா்பில் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் கொங்கு நகா், அப்பாச்சி நகரில் உள்ள திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வங்கியின் மும்பை தலைமை அலுவலக கடன் பிரிவு பொது மேலாளா் அலோக் குமாா், அந்நியச் செலாவணி பிரிவு துணைப் பொது மேலாளா் அமித் குமாா் சின்ஹா, கோவை மண்டல தலைமை பொது மேலாளா் எஸ்.ஏ.ராஜ்குமாா், திருப்பூா் பிராந்திய மேலாளா் செல்லதுரை ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க கௌரவத் தலைவா் ஆ.சக்திவேல், சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், ஈஸ்ட்மேன் ஏற்றுமதி நிறுவனத் தலைவா் என்.சந்திரன், ராயல் கிளாசிக் குழும தலைவா் ஆா்.கோபாலகிருஷ்ணன், எஸ் என் க்யூ எஸ் குழும தலைவா் இளங்கோவன் ஆகியோா் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனா். தலைமை அலுவலக பொது மேலாளா் அலோக் குமாா், 80-க்கும் மேற்பட்டோருக்கு கடன் ஒப்புதல் கடிதங்களை வழங்கி பேசினாா். இதில் தொழில்முனைவோா் பலா் கலந்து கொண்டனா்.