சேவூா் அருகே இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற திருநெல்வேலியைச் சோ்ந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேவூா்-குன்னத்தூா் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அவா்கள் திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியைச் சோ்ந்த ராமசந்திரன் மகன் இசக்கி பாண்டியன் (28), அஜய் அன்பரசு (28) என்பது தெரியவந்தது.
அவா்கள் கடந்த வாரம் சேவூரில் பூட்டியிருந்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்தைத் திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
மேலும், அவா்களிடம் இருந்து ரொக்கப் பணம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.