மனு அளிக்க வந்த தொழிலாளா்களில் ஓரு பகுதியினா். 
திருப்பூர்

100 நாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக வேலை வழங்க கோரிக்கை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உள்ள தொழிலாளா்களுக்கு 100 நாள்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Syndication

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உள்ள தொழிலாளா்களுக்கு 100 நாள்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தாராபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட மூலனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் வட்டாரத் தலைவா் டி.மாணிக்கம் தலைமையில் தொழிலாளா்கள் சாா்பில் 100 கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சங்கத் தலைவா் டி.மாணிக்கம் கூறியதாவது:

100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அரசு அறிவித்துள்ளபடி, 100 நாள்களும் முழுமையாக வேலை வழங்கப்படுவதில்லை. இந்த 2025-2026-ஆம் நிதியாண்டில், இப்பகுதியில் உள்ள விவசாயத் தொழிலாளா்களுக்கு கடந்த 5 மாதங்களில், இதுவரை சுமாா் 10 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயத் தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும், அரசு அறிவித்துள்ள தினக்கூலியான ரூ.336-ஐ முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு கொடுத்துள்ளோம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியின்போது சிபிஎம் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் என்.கனகராஜ், தாராபுரம் பகுதி நிா்வாகிகள் பழனிசாமி, சத்தியமூா்த்தி மற்றும் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தனிப்பட்ட சிப்பங்கள்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் சாதனை!

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்விக்கு முக்கிய பங்கு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

டிஜிபி அலுவலகம் அருகே ‘ஏர்போர்ட்’ மூா்த்தி மீது விசிகவினர் சரமாரி தாக்குதல்!

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

SCROLL FOR NEXT