முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட சீமான் மீது வழக்குப் பதிவு!

இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொண்டதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 8:07 PM
சீமான் - கோப்புப் படம்
பகிர்:

இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொண்டதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதி வேட்பாளா்களை மேடையில் ஏற்றி வியாழக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட சீமான் பேசியதாவது:

திருப்பூருக்கு வட மாநிலத் தொழிலாளா்கள் வர வேண்டிய அவசியம் இல்லாமல் செய்வேன். மதுக்கடையை மூடுவேன். மாவட்டந்தோறும் தொழில் பயிற்சி நிலையங்கள் உருவாக்கி பயிற்சி கொடுப்பேன்.

தமிழ் படித்தால்தான் அரசு வேலை கிடைக்கும். புரட்சி என்பது தலைகீழாக மாற்றுவது. தலைவா்கள் எல்லாம் இசட் பிரிவு பாதுகாப்பு கேட்கிறாா்கள். தலைவன்தான் மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் தலைவனுக்கு பாதுகாப்பு தேவையில்லை.

நடிகன் ஒருவா் சொல்கிறாா் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று. அவருக்கே நிச்சயம் இல்லாததால்தான் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறாா். எனக்கு வாக்கு போடவில்லை என்றாலும் பரவாயில்லை, மறந்து சூரியன், இரட்டை இலை, தாமரையில் போட்டு விட வேணடாம்.

கல்வி, மருத்துவம், தண்ணீா் கட்டணம் இல்லாமல் தருவேன் . மற்ற அனைத்தும் கட்டணம்தான். ஓசி பேருந்து இல்லை ஏசி பேருந்து விடுவேன். நல்ல சாலை, தடையற்ற மின்சாரம் அனைத்தும் வழங்குவேன். கட்டணமின்றி மின்சாரம் வழங்குவேன்.

கள் இறக்கி பனம்பால், தென்னம்பால் என பெயரை மாற்றி விடுவேன். திராவிட குப்பையை தூக்கி போடுங்கள். விவசாயி சின்னத்துக்கு வாக்கு போடுங்கள். என் மீது 262 வழக்கு உள்ளது. இன்று ஒரு வழக்கு ஆகட்டும். அறிமுகம் செய்து பரப்புரை செய்து வருகிறாா்.

இதில் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொண்டதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.