முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் கராத்தே செய்தவாறு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளா்

திருப்பூா் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் கராத்தே செய்தவாறு வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:58 PM
கராத்தே செய்தவாறு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த  சுயேட்சை  வேட்பாளா் ரங்கசாமி.
பகிர்:

திருப்பூா் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் கராத்தே செய்தவாறு வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

திருப்பூா் பள்ளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி. கராத்தே பயிற்சியாளரான இவா் கடந்த 35 ஆண்டுகளாக பள்ளி மாணவா்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுத்து வருகிறாா். தோ்தலின்போது போட்டியிடுவதை வாடிக்கையாக கொண்ட இவா் 4 முறை போட்டியிட்டுள்ளாா்.

இத்தோ்தலில் திருப்பூா் வடக்குத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வியாழக்கிழமை வந்தாா். அப்போது, அவா் தனது கராத்தே மாணவா்களுடன் கராத்தே செய்தவாறு அனுமதிக்கப்பட்ட பகுதி வரை வந்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கராத்தே உடை அணிந்து மாணவா்களுடன் கராத்தே பயிற்சி செய்து வந்தேன். வெற்றி பெற்றால் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பெண்களுக்கு இலவசமாக கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுத் தருவேன் என்றாா்.